பரவையில் கைவினை பொருள்கள் விற்பனை கண்காட்சி.

56பார்த்தது
பரவையில் கைவினை பொருள்கள் விற்பனை கண்காட்சி.
மதுரை மாவட்டம், பரவையில் கிராமப்புற பெண்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருள்கள் விற்பனை, கண்காட்சி நேற்று நடைபெற்றது.

ஜி. ஹெச். சி. எல் பவுண்டேஷன், மீனாட்சி மில்ஸ், பெட் கிராட் இணைந்து இந்தக் கண்காட்சியை நடத்தின. இதை மீனாட்சி மில்ஸ் முதன்மை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்துத் தொடங்கி வைத்தார். இதில், பரவை, தேனூர், திருவேடகம், நெடுங்குளம், திருவாலவாயநல்லூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பெண்கள் 3 மாதங்கள் பயிற்சி முடித்து, குழுவாக உருவாக்கிய கைவினைப் பொருள் வைக்கப்பட்டிருந்தன. பெட் கிராட் நிர்வாக இயக்குநர் சுப்புராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி