ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், இந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர் வரும் போட்டிகளில் அவர் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.