காவேரிபட்டிணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்.

56பார்த்தது
சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் முத்துராமலிங்கம் ஆலோசனையின்பேரில்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவரும் சமூக சேவகருமான மஹபூப் பாஷா தலைமையில் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு காலை 11 மணியளவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக காவல் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கை பற்றி சிறப்புரை ஆற்றினார்.
இதில் கிருஷ்ணகிரி மாவட்ட இணைத் தலைவர் அரவிந்குமார், மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல், மாவட்ட அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட அமைப்பு செயலாளர் திம்மராயன், மாவட்ட விவசாய அணி தலைவர் சக்திவேல், மாவட்ட விவசாய அணி துணை தலைவர் பெருமாள், மாவட்ட வர்த்தக அணி தலைவர் பெருமாள், மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதாம்உசேன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கணபதி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முருகேசன், மாவட்ட வர்த்தக அணி இணைத் தலைவர் சரவணன், ஒன்றிய அமைப்பாளர் சின்னசாமி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி