மதியழகன் எம்எல்ஏ வுக்கு புத்தாண்டு வாழ்த்து.

76பார்த்தது
மதியழகன் எம்எல்ஏ வுக்கு புத்தாண்டு வாழ்த்து.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கிருஷ்ணகிரி கிழக்கு திமுக மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் எம்எல்ஏ வை மாநில மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பொண்ணாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர், அப்போது மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் காந்தி, எம்எல்ஏ வுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு மதியழகன் எம்எல்ஏ காந்திக்கு அந்த இனிப்பை ஊட்டி வாத்து தெரிவித்தார். மகளீர் அணி துணை அமைப்பாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சின்னத்தாய், இளைஞர் அணி துணை அமைப்பாளர் லயோலா ராஜசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி