கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜார்கலட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி வளாகத்தில் பழமையான மரம் ஒன்று காய்ந்த நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மரம் எந்த நேரம் விழுமோ என்ற அச்சத்துடன் மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து சென்று வருகின்றனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பு பள்ளி வளாகத்தில் காய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களின் கோரிக்கை உள்ளது.