மாணவி மாயம்-போலீசார் விசாரணை.

75பார்த்தது
மாணவி மாயம்-போலீசார் விசாரணை.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரம் ஜோதி நகர் பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி, போலுப்பள்ளி பகுதியில் உள்ள கல்லூரியில் பி. காம் முதலாமாண்டு படித்து வந்தார். சம்வம் அன்று கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு வர வில்லை என்று குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடியும். இல்லாததால் இதுகுறித்து பெற்றோர். கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார்கொடுத்தார். அதில் பையனப்பள்ளியை சேர்ந்த நரசிம்மன்(24) என்பவர் தங்களது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளனர். அதன் பேரில் போலீசார் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.