கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அலசநத்தம் சாலை பகுதியை சேர்ந்தவர் அருண் (30) இவர் டூவீலரில் ஒசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகே சம்வம் அன்று மாலை சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அருணை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.