சூளகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்-போலீசார் விசாரணை.

60பார்த்தது
சூளகிரி அருகே கல்லூரி மாணவி மாயம்-போலீசார் விசாரணை.
சூளகிரி அடுத்துள்ள ஒரு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் கல்லூரி ஒன்றில் பி. காம். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து மாணவி திடீர் என்று மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் மாணவியின் பெற்றோர் சூளகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதில் சூளகிரி அருகே கூலியம் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ் (20) என்பவர் தங்கள் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடத்தி சென்றுள்ளதாக புகாரில் கூறியுள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி