பெண்ணிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல்

82பார்த்தது
பெண்ணிடம் உரிய ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பர்கூர்- மத்தூர் சாலையில் தீர்த்தகிரிப்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கலையரசி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டூவீலரில் வந்த பெண்ணை நிறுத்தி சோதனையிட்டதில் அவரிடம் 91 ஆயிரத்து 480 இருந்தது தெரிந்தது. அதிகாரிகள் விசாரணையில் அவர் பர்கூர் அடுத்த ஜிஞ்சம்பட்டியை சேர்ந்த பாமா(42) என்பதும், மகளிர் சுய உதவிக்குழு கடன் சங்க முகவராக உள்ளதும் தெரியவந்தது. அந்த பகுதியில் வசூலித்த ரூ. 91 ஆயிரத்து 480 வெங்கடசமுத்திரம் இந்தியன் வங்கியில் செலுத்த சென்றது தெரிந்தது. ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படையினர் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து பர்கூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பன்னீர்செல்வம் மற்றும் தாசில்தார் திருமுருகனிடம் ஒப்படைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி