பச்சிளம் குழந்தைகள் கடத்தல்.. சிபிஐ விசாரணை

66பார்த்தது
பச்சிளம் குழந்தைகள் கடத்தல்.. சிபிஐ விசாரணை
குழந்தை கடத்தல் தொடர்பாக டெல்லி முழுவதும் பல இடங்களில் மத்திய புலனாய்வு பிரிவு (சிபிஐ) சோதனை நடத்தியது. இதில், கேசவ்புரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கடத்தப்பட இருந்த புதிதாய்ப் பிறந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது என சிபிஐ தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 10 குழந்தைகளை ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை விற்றுள்ளனர். டெல்லி மட்டுமன்றி பல மாநிலங்களிலும் இதுபோன்ற குற்றங்களில் இவர்கள் ஈடுபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி