2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து

70பார்த்தது
2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து
திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா தெற்கு கொசலம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன் (32). இவர் தனது பைக்கில் நேற்று முன்தினம் குளித்தலை பைபாஸ் சாலை கலைமகள் பள்ளி அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மேலப்பட்டியைச் சேர்ந்த சந்திரகுமார் என்பவர் ஒட்டி வந்த மற்றொரு பைக் மோதியதில் மோகன் படுகாயம் அடைந்தார். குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குளித்தலை போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி