இந்தியா கூட்டணி மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்

80பார்த்தது
இந்தியா கூட்டணி மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம்
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் உப்பிடமங்கலம் கடைவீதியில் உள்ள இந்தியா கூட்டணி தேர்தல் பணிமணையில் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி அளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி கலந்து கொண்டு, இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணியை கை சின்னத்தில், அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட, திமுக நிர்வாகிகள், பிஎல்ஏ2 வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தல் களப்பணி ஆற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் திமுக கரூர் நாடாளுமன்ற தொகுதி மேலிட பொறுப்பாளர் எம்பி அப்துல்லா, உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட திமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :