குற்றங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்

59பார்த்தது
பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் தேசிய தலைவர் டி. எம். ஓங்கர் கரூரில் பேட்டி


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில், மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாநிலத் தலைவர் எம். ஏ. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனத் தலைவர் டி. எம். ஓங்கர் கலந்துகொண்டு மாநில தலைமை அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், தேச சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் தமிழக முழுவதும் கிளைகளை துவக்கி, பொது மக்களுக்கும் அரசுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் வகையில், பணியாற்றி வருகிறது. அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள் ஆகியவற்றை பெற்றுத் தருவதில், முனைப்பாக செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பெண் குழந்தைகள் பாதுகாப்பு பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதை பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கு பொதுமக்கள் போதிய விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இதற்காக, சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கவுன்சில் முனைப்பு காட்டி வருகிறது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி