மக்களுடன் முதல்வர் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

583பார்த்தது
தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு முகாம்கள் மூலம் வருவாய்த்துறை, மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகள் சார்பாக பொதுமக்களிடம் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் அந்த சிறப்பு முகாமை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்து மனுக்களை பெற்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் மனுக்கள் பெரும் முகம் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் பகுதியில் மண்டலம் மூன்று அலுவலகம் அருகே மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மண்டலம் மூன்று தலைவர் ராஜா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜ் மற்றும் பூபதி மற்றும் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். இதில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனுக்களை எழுதி அரசு அதிகாரியிடம் வழங்கினர் ஒரு சில மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

தொடர்புடைய செய்தி