ஆத்துப்பாளையம் நீர்தேக்கத்தில் தண்ணீர் திறப்பு

56பார்த்தது
கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் நொய்யல் ஆத்து பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவுப்படி கரூர் மாவட்டம் புகலூர் வட்டம் ஆத்துப்பாளையம் நீர் தேக்கத்தில் ஜனவரி 3ஆம் தேதி காலை 11 மணியளவில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கும் நிகழ்வு அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் அப்புசாமி, கீழ் பவானி வடிநில உபகோட்டம் காங்கயம் பாசன பிரிவு உதவி செயற்பொறியாளர் சதீஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நெடுங்கூர் கார்த்தி, உள்ளிட்ட திமுகவினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :