குடகனாறு ஆற்று படுகையில் சட்டவிரோதமாக மது விற்பனை.

74பார்த்தது
குடகனாறு ஆற்று படுகையில் சட்டவிரோதமாக மது விற்பனை. ஒருவர் கைது.


கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் ரஷ்யா சுரேஷ் ஜூன் 10ஆம் தேதி, வெஞ்சமா கூடலூர் அருகே உள்ள குடகனாறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது குடகனாறு ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பது கண்டறியப்பட்டது.

இந்த சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்ட வெஞ்சமாங் கூடலூர் அருகே பெரிய புதூர் காலனியைச் சேர்ந்த நாகன் மகன் முருகன் வயது 61 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 8- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பிறகு முருகன் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை காவல் நிலையப் பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி