காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வாலிபர்கள்

62பார்த்தது
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வாலிபர்கள்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதம் கோடு மருதம்புறம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(28), இவர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த பத்துக்கு மேற்பட்ட இளைஞர்களிடம் , மருதங்கோடு , வெந்தோட்ட விளை பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தன்னுடைய மகள் தாய்லாந்து நாட்டில் நல்ல வேலையில் இருக்கிறார். உங்களுக்கும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாங்கி கொடுக்கறேன் எனக் கூறி, 15/7/24 அன்று தாய்லாந்து நாட்டிற்கு இந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை ஏமாற்றிய அந்த நபரும் மகளும் சேர்ந்து அழைத்துச் சென்றுள்ளனர், தாய்லாந்தில் சென்ற போது மோசடி பேர்வழியின் மகள் மற்றும் தாய்லாந்து நாட்டுடை சேர்ந்த ஏஜென்சிகள் அனைவரும் இங்கிருந்து சென்ற பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை அங்கு பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று அலக்களித்து இவர்களிடமிருந்த தலா ரூ. 5 லட்சத்தை பெற்றுவிட்டு, அங்கு ஒரு மாலில் கொண்டு விட்டு விட்டு மோசடி கும்பலினர் அனைவரும் தப்பி உள்ளனர். பின்னர் ஹோட்டல் அறையில் இருந்த இளைஞர்களின் பணம் மற்றும் பொருள்களையும் அந்த கும்பல் திருடி சென்றுளனர். இந்நிலையில் எங்களிடம் பணத்தை மோசடி செய்த இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு இன்று மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் இன்று முற்றுகையிட்டு மனு அளித்தனர், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Job Suitcase

Jobs near you