புதிய கட்சி- கொடி சின்னம் அறிமுகம்

1890பார்த்தது
புதிய கட்சி- கொடி சின்னம் அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே மண்ணாரப்பு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தீஸ்வரன். ஆட்டோ ஓட்டுநரான இவர் இக் கட்சியை துவங்கி, தலைமை தேர்தல் ஆணையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு பதிவு செய்தார். அதன்பின்னர் கட்சிக் கொடி, சின்னம் அறிமுகப்படுத்தாத நிலையில் கடந்த 2016, 2021 இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியிலும், 2019 இல் நடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், 2022 இல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் களியக்காவிளை பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கும் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்நிலையில் 2024 ஆங்கில புத்தாண்டையொட்டி திங்கள்கிழமை களியக்காவிளை அருகே பனங்காலை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து தனது கட்சி கொடி அறிமுகம் செய்யும் விழா நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் தலைவர் வசந்தீஸ்வரன் கொடியை அறிமுகம் செய்து பேசினார். இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி