வடக்கு சூரங்குடியில் 5 பேருக்கு வெட்டு 12 பேர் மீது வழக்கு

79பார்த்தது
வடக்கு சூரங்குடியில் 5 பேருக்கு வெட்டு 12 பேர் மீது வழக்கு
வடக்கு சூரங்குடி பகுதி சேர்ந்தவர் பிரபு (37) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று முன்தினம்  அந்த பகுதியில் உள்ள கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது கோவில் குளத்தின் படிக்கட்டில் வைத்து சிலர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை பிரபு கண்டித்துள்ளார்.  

       பின்னர் அன்று இரவு அந்த கும்பல் பிரபுவிடம்  தகராறு செய்து அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதை தடுத்த   அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ண பெருமாள் (50), சிவபெருமாள் (68) அச்சுதன் (20 )அகிலன் (20) மற்றும் 14 வயது சிறுவன். ஒரு வருக்கும் வெட்டியுள்ளனர்.  

    படுகாயம் அடைந்த ஆறு பேரையும் பொதுமக்கள் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர் 

     இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமாரி போலீஸ் தலைமை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.   12 பேர் மீது ஏழு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து வடக்கு சூரங்குடி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி