நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ் (42). லாரி டிரைவர். சம்பவத்தன்று நாகராஜா கோவில் திடல் அருகே டாரஸ் லாரிக்கு பஞ்சர் ஒட்டிக்கொண்டு இருந்தார். அப்போது மாநகராட்சி 12-ம் வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் சுனில் அரசு தனது நண்பர் ஒருவருடன் அங்கு வந்தார். லாரியில் இருந்த மணலை கையில் அள்ளி இது என்ன என்று விமல் ராஜ் இடம் கேட்டனர்.
அதற்கு விமல்ராஜ் இது பாறை பொடி என்று கூறியுள்ளார். இதையடுத்து இதை கொண்டு செல்ல உரிமம் இருக்கிறதா என கேட்டுள்ளனர். அப்போது சுனில் அரசுக்கும் விமல் ராஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் தகாத வார்த்தைகள் பேசிய இரண்டு பேரும் விமல் ராஜை கீழே தள்ளி ஓட்டுனர் உரிமம் மட்டும் ரூபாய் 12 ஆயிரத்து 800 ஆகியவற்றை பறித்ததோடு கொலை மிரட்டல் கொடுத்தாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த விமல்ராஜ் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வடசேரி போலீசில் விமல்ராஜ் புகார் அளித்தார். அதன் பெயரில் கவுன்சிலர் சுனில் அரசு மற்றும் கண்டால் தெரியும் ஒருவர் என இரண்டு பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.