குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

67பார்த்தது
குமரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில்,  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.    நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி,   சாலை வசதி  உள்ளிட்ட  பல்வேறு  நலத்திட்ட  உதவிகள் கோரி 266 கோரிக்கை  மனுக்கள்  இன்று  பெறப்பட்டது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கோரிக்கை  மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பி. என். ஸ்ரீதர், இ. ஆ. ப. , அவர்கள்  அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, இ. ஆ. ப. , நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ். காளீஸ்வரி, தனித்துணை ஆட்சியர் (ச. பா. தி) செந்தில்வேல் முருகன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அலுவலர் அப்துல் முகமது ஷேக்,  அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி