2023 ஆம் ஆண்டு கடந்து 2024 ஆம் ஆண்டு இன்று நள்ளிரவு பிறக்கிறது. இதனை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று நள்ளிரவிலும் நாளை காலையிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தேவாலயங்களில் செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் இன்று இரவு 11: 30 மணிக்கு நன்றி ஆராதனை நடக்கிறது. 12 மணிக்கு புத்தாண்டு சிறப்பு திருப்பலியை கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை நிறைவேற்றுகிறார். அதனை தொடர்ந்து ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கின்றனர்.
இதனைப் போன்று குமரி மாவட்ட சிஎஸ்ஐ பேராயர் செல்லையா தலைமையில் புத்தாண்டு ஆராதனை நிகழ்ச்சி தேவாலயத்தில் நாளை காலை நடைபெற இருக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இந்த சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன.