தெங்கம்புதூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.

67பார்த்தது
தெங்கம்புதூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.
கன்னியாகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு 51 மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார். பின்னர் அவர் பேசும் போது, மாணவ- மாணவிகள் கொள்கை பிடிப்போடு படிக்கவேண் டும். பக்கத்து ஊரான சரக்கல்விளையில் உள்ள அரசு பள்ளியில் தான் சிவன் படித்து இஸ்ரோ தலைவராக பணியாற்றினார். அதை மனதில் வைத்து மாணவர்கள் நன்றாக படித்து உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்" என்றார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலவசிகரன், மாநகராட்சி மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் ரமேஷ், ஜெயவிக்ரமன், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், ராஜாக்கமங்கலம் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :