டெம்போ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயற்சி

1051பார்த்தது
டெம்போ டிரைவரை கத்தியால் குத்தி பணம் பறிக்க முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக  கேரளாவிற்கு வைக்கோல் கட்டுகளை வாகனங்களில் ஏற்றிக்   கொண்டு செல்லப்படுவது வழக்கம். சம்பவதினம் நாகர்கோவிலுக்கு ஒரு டெம்போவில் வைக்கோல் லோடு கொண்டு வரப்பட்டது.    டெம்போவை   ஐயப்ப தாஸ் (45) என்பவர் ஓட்டி வந்து,    நாக்கால்மடம் சுங்கச்சாவடி அருகே நிறுத்தி, டெம்போவில் படுத்திருந்தார்.  

      இந்த நிலையில் மூன்று பைக்குகளில் ஆறு பேர் அங்கு வந்து டெம்போவில் படுத்திருந்த ஐயப்பதாசை எழுப்பி தகராறு செய்து, பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

       இதில் தகராறு ஏற்பட்டுள்ளது அப்போது ஆத்திரமடைந்த ஆறு பேரில் ஒருவர் ஐயப்ப தாஸ்  மார்பில் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்த ஐயப்பதாஸின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள டிரைவர்கள் அவரை மீட்டு, நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

      இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி