மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகுகள்

1548பார்த்தது
மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் குளச்சல் விசைப்படகுகள்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் 300 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன. இந்நிலையில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகுகள் கடந்த 23 ம் தேதி கரை திரும்பின. மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிவிட்டு மறுநாள் சுனாமியில் இறந்த மீனவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர். இவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு ஜனவரி 2 ம் தேதி முதல் மீண்டும் மீன் பிடிக்க  கடலுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த 4  நாட்களாக குளச்சல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால்  கட்டுமரங்கள், பைபர் வள்ளங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு சில கட்டுமரங்களே கடலுக்கு சென்றன. அவற்றுள் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் குளச்சலில் இன்று  மீன் வரத்து குறைந்தது. இன்று வானிலை எச்சரிக்கை முடிகிறது. இதையடுத்து நாளை (வியாழக்கிழமை)முதல் விசைப்படகுகள் மீண்டும் பிடிக்க செல்ல தயாராகி வருகின்றன. தற்போது படகுகளுக்கு குடிநீர் ஏற்றும் பணி நடந்து வருகிறது. ஆழ்கடலில் காற்று தணிந்தால் மாலை ஐஸ் நிரப்பும் பணி தொடங்கும். நாளை முதல் படகுகள் மீண்டும் கடலுக்கு செல்லும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி