கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன் துறை பகுதி சூசைபுரம் காலனியை சேர்ந்தவர் ரொனால்ட் (41) மீனவர். இவருக்கும சொந்தமாக ஃபைபர் படகு உள்ளது. இந்த படகை கடந்த 13ஆம் தேதி மீன்பிடித் தொழில் முடித்து ஏவிஎம் கால்வாய் பகுதியில் நிறுத்தி விட்டு, படகின் எஞ்சின் புதியது என்பதால் எஞ்சினை படகுடன் சேர்த்து சங்கிலியால் கட்டி இருந்தார்.
நேற்று அதிகாலை மீன்பிடித் தொழிலுக்கு செல்ல வேண்டி படகில் பார்த்தபோது புதிய எஞ்சின் கழட்டப்பட்டு வேறு ஏதோ பழைய எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது கண்டுபிடித்தார். இது தொடர்பாக ரொனால்ட் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார்.
தொடர்ந்து ரொனால்ட சக மீனவர்களுடன் தனது இன்ஜினை அந்த பகுதியில் நிறுத்தி இருந்த படகுகளில் தேடி உள்ளார். அப்போது தூத்தூர் சுனாமி காலனி பகுதியைச் சேர்ந்த வில்சன் (36) என்பவரின் பைபர் படகில் ரொனால்டின் புதிய இன்ஜின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வில்சனை பிடித்து இரண்டு படகுகளிலிருந்து இன்ஜினை கழற்றி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரெனால்ட் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வில்சனை கைது செய்தனர்.