கருங்கல்: கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு வீதி நாடகம்

1054பார்த்தது
கருங்கல்: கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு வீதி நாடகம்
கருங்கல் அருகேயுள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அய்க்கப் அமைப்பு' சார்பாகத் தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் நடைபெற்றது. தேர்தல் குறித்த விழிப்புணர்வு வீதி நாடகத்தைக் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் பேரருட்பணியாளர்  ஆன்றனி ஜோஸ் துவங்கி வைத்தோடு 'தேர்தல் குறித்தும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், உலக வரலாற்றில் தேர்தல் முறை என்கிற ஜனநாயக முறை எப்படித் தோன்றி வளர்ச்சியடைந்தது' என்பது குறித்துப் பேசினார்.  

      தமிழக அய்க்கப் அமைப்பின் தலைவர் அருட்பணியாளர்  அன்னராஜ் எஸ்ஜே தலைமையிலான 14 மாணவ மாணவிகள் புனித அல்போன்சா கல்லூரிக்கு வருகை தந்ததோடு தேர்தல் விழிப்புணர்வு குறித்த வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர்.  

       நிகழ்ச்சியில்  அய்க்கப் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஸ்டெம் எடில்பர்க்,   அய்க்கப் உறுப்பினர்கள், வீதி நாடகத்தில் நடித்த நடிகர்கள் ஆகியோரைக் கல்லூரி முதல்வர் அருட்பணியாளர் முனைவர் மைக்கேல் ஆரோக்கியசாமி , கல்லூரி வளாக ஆன்மீக வழிகாட்டி அருட்பணியாளர்  அஜின் ஜோஸ், கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்தினர்‌.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி