குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தோவாளையில் 100 நாள்
வேலை திட்ட தொழிலாளர்கள் வயல் வெளியில் இறங்கி நேற்று
ஆர்ப்பாட்டம் நடந்தினர். இதற்கு தோவாளை ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் என். எம். தாணு முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டைகளை தூக்கி காண்பித்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். குறித்து ஊராட்சி தலைவர் நெடுஞ்செழியன் கூறும் போது ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைப்பதால் வீட்டு வரி, குடிதண்ணீர் வரி பல மடங்கு அதிகமாகும். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறிவிடும், வளர்ச்சி பணிகள் காலதாமதமாக நடைபெறும். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்' என்றார்.