தேய்பிறை போல் மாறிய சிமென்ட் சாலையால் அவதி

71பார்த்தது
தேய்பிறை போல் மாறிய சிமென்ட் சாலையால் அவதி
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம், தேன்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இங்குள்ள கண்ணகி தெருவில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.

இந்நிலையில், இச்சாலை வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோர், சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.

எனவே, கண்ணகி தெருவில் சேதமடைந்த சிமென்ட் சாலையை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி