"ஓட்டு போடுங்கள் 5% தள்ளுபடி பெறுங்கள்''

66பார்த்தது
"ஓட்டு போடுங்கள் 5% தள்ளுபடி பெறுங்கள்''
வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப். , 20ம் தேதி காண்பித்தால், சாப்பிடும் உணவுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என செங்கல்பட்டு கலெக்டர் அறிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையமும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப். , 19ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்த, ஓட்டளித்துவிட்டு வருபவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், ''லோக்சபா தேர்தலில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஏப். , 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும்; வாக்காளர்கள் ஓட்டு போட்டுவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப். , 20ம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்'' என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி