ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு

82பார்த்தது
ரயில் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொளத்துார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வரதன் (48).
இவர், நேற்று (செப்.,16) காலை, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகில் உள்ள வி.ஐ.பி., நகரில், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, மின்சார ரயிலில் சென்னை சென்றார்.

மாலையில், மீண்டும் வந்து வரதன் பார்த்த போது, இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து, வரதன் அளித்த புகாரின்படி, மறைமலை நகர் போலீசார் விசாரிக்கின்றனர். புறநகர் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதிவாசிகள் வலியுறுத்துகின்றனர்.

மறைமலைநகர் அருகே ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடி கொண்ட சம்பவத்தால் பகுதியில் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி