சாலையில் கவிழ்ந்த டூ - வீலர் கரும்பூரில் வாலிபர் பலி

78பார்த்தது
சாலையில் கவிழ்ந்த டூ - வீலர் கரும்பூரில் வாலிபர் பலி
சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம், 32. நேற்று அதிகாலை, சிங்கபெருமாள் கோவில் அடுத்த கரும்பூர் கிராமத்தில், தனது நண்பர் அசோக், 23, என்பவருடன் பஜாஜ் பல்சர் இருசக்கரவாகனத்தில் வந்து கொண்டி ருந்தார்.

இருசக்கர வாகனத்தை அசோக் ஓட்டி வந்தார். கரும்பூர் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில் வேகமாக வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலை வளைவில் கவிழ்ந்தது.

இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அசோக் காயங்களுடன் தப்பினார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற போக்கு வரத்து போலீசார், பாலசுப்பிரமணியம் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து, தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி