காஞ்சிபுரத்தில் குற்றவியல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், விரைவு நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
ஆனால், நுகர்வோர் நீதிமன்றம், மகிளா, குடும்ப நலம், முதன்மை குற்றவியல், மாவட்ட முதன்மை நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் செங்கல்பட்டில் இயங்கி வருகின்றன.
இந்த நீதிமன்றங்கள் காஞ்சிபுரத்தில் இயங்க வேண்டும் என, வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், முதன்மை குற்றவியல் நீதிமன்றமும், மாவட்ட முதன்மை நீதிமன்றமும், முதன் முறையாக வரும் மார்ச் 3ம் தேதி, காஞ்சிபுரம் தாலுகா அலுவலக வளாகத்திலேயே திறக்கப்பட உள்ளது.