பா. ஜ. க நிரவாகி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

67பார்த்தது
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பா. ஜ. க நிரவாகி தீடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது (46) இவர் பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளராக இருந்து வருகிறார்.
கடந்த 4 தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது அப்போது கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுகவை சார்ந்தவர் வெற்றி பெற்றார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தை இப்படித்தார். இந்த நிலையில் கோவையில் திமுகவினர் (ஆடு) ஆட்டிற்கு அண்ணாமலை புகைப்படம் வைத்து நடுரோட்டில் ஆட்டை வெட்டும் சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதுபோன்று திமுகவினர் செய்யும் செயலை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கண்டிகை கிராமத்தை சேர்ந்த பாஜக பேச்சாளர் சாகுல் அமீது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்குவதற்காக வருகை தந்தார் அப்பொழுது அவர் திடீரென செங்கல்பட்டு திண்டிவனம் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு அடைந்து நடைபெற்ற முதல் குறை தீர்ப்பு கூட்டத்தில் பாஜக நிர்வாகி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி