குடிநீர் கிணறு இடிந்து சேதம் வடக்கு செய்யூரில் அவஸ்தை

54பார்த்தது
குடிநீர் கிணறு இடிந்து சேதம் வடக்கு செய்யூரில் அவஸ்தை
செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில், 1, 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

வடக்கு செய்யூர் பகுதியில், நான்கு குடிநீர்கிணறுகள் உள்ளன. குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக, 4 மேல்நிலைத் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வழியாககுடிநீர் வினியோகம்செய்யப்படுகிறது.

ஏரியின் நடுவே, 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர், கிணற்றின்சுற்றுச்சுவர்கள் சேதமடைந்து இருந்த நிலையில், நேற்று காலை 4: 30 மணிக்கு திடீரென இடிந்து தரைமட்டமானது.

இதனால், மாரியம்மன் கோவில் தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, குடிநீர் வினியோகம்செய்யப்படும் மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர்ஏற்ற முடியாத சூழல்ஏற்பட்டுள்ளது.

ஊராட்சி நிர்வாகம்சார்பாக, மற்ற மூன்று குடிநீர் கிணறுகளில் இருந்து, இப்பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சீராக குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், தண்ணீர்பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், துறை சார்ந்த அதிகாரிகள் விரைவில் புதிய குடிநீர் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வடக்கு செய்யூர் கிராமமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி