சரக்கு வாகனம் தீ வைப்பு; மர்ம நபர்கள் அட்டூழியம்

2276பார்த்தது
சரக்கு வாகனம் தீ வைப்பு; மர்ம நபர்கள் அட்டூழியம்
மறைமலை நகர் என். ஹெச். , - 1 நக்கீரன் தெருவை சேர்ந்தவர் சந்துரு, 52. தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவர், தன் வேலை ஆட்களை ஏற்றிச்செல்லும் எய்ச்சர் வேனை, பேரமனுார் பிள்ளையார் கோவில் பகுதியில், நேற்று முன்தினம் இரவு நிறுத்தி வைத்திருந்தார்.

நேற்று காலை வேனை எடுத்துச்செல்ல வந்த போது, எய்ச்சர் வேன் இஞ்ஜின் பகுதியில், மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து, சந்துரு மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி