செல்போன் கடையில் ரகளை செய்தவர்கள் மீது போலீசில் புகார்

5123பார்த்தது
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பிரபலமான செல்போன் கடை ஒன்றில் சிலர் புகுந்து அங்கு பணியாற்றிய பெண்ணிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் கடையில் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார் அதன் அடிப்படையில் கடையில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் அங்கு சென்றபோது அங்கு மூன்று பேர் கொண்ட கும்பல் அவர்களிடம் தகாத வார்த்தைகள் பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடையின் உரிமையாளர் ஜெயச்சந்திரன் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், அந்த அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி