தாம்பரம்: ரயிலிலிருந்து தவறிய மாணவர்கள்..பதற்றம்!

6280பார்த்தது
தாம்பரம்: ரயிலிலிருந்து தவறிய மாணவர்கள்..பதற்றம்!
தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடற்கரைக்கு நேற்று மாலை சென்ற ரயிலில் கூட்டம் அதிகம் இருந்தது. பலரும் ரயிலில் தொங்கியபடி பயணித்தனர். பழவந்தாங்கல் - பரங்கிமலை இடையே ரயில் சென்றபோது தொங்கியபடி வந்தவர்களில் இருவர் திடீரென தவறி கீழே விழுந்தனர்.

இதில், அவர்கள் பலத்த காயமடைந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் பரங்கிமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிண்டி, ஐ. டி. ஐ. , யில் முதலாமாண்டு மாணவரான நங்கநல்லுார், ரகுபதி நகரை சேர்ந்த தீபக், 18, என்பவரும், திண்டிவனம் கல்லுாரி மாணவர் குரு, 20, என்பதும் தெரிய வந்தது. "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி