"அக்கமாபுரம் கிராமத்திற்கு தார்ச்சாலை அமையுமா? "

68பார்த்தது
"அக்கமாபுரம் கிராமத்திற்கு தார்ச்சாலை அமையுமா? "
மதுரமங்கலம் அடுத்த அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, வளத்துார் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, அக்கமாபுரம் கிராம மக்கள் காய்கறி, பூ, நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாய விளைப்பொருட்களை, இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர்.


இந்த சாலையில், அக்கமாபுரம் கிராமத்தில் இருந்து, லப்பை கண்டிகை எல்லை வரையில், ஒரு கி. மீ. , துாரத்திற்கு தார்ச்சாலை அமைக்கவில்லை. இதனால், மழைக்காலத்தில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக, நெல் மற்றும்உரங்களை ஏற்றி செல்லும்போது, மண் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன.

இதை தவிர்க்க, லப்பை கண்டிகை எல்லை சாலை முதல் அக்கமாபுரம் வரையில் தார்ச்சாலை அமைக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். "

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி