மறைந்த விஜயகாந்த்திற்கு மணல் சிற்பம் மூலம் நினைவஞ்சலி

53பார்த்தது
மறைந்த விஜயகாந்த்திற்கு மணல் சிற்பம் மூலம் நினைவஞ்சலி
செங்கல்பட்டு மாவட்டம் , கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் மணல் சிற்பக் கலைஞராக பணியாற்றி வருகிறார். கடந்தாண்டு நடைபெற்ற புத்தகக் கண்காட்சி , இயற்கை விழிப்புணர்வுகள், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு மணல் சிற்பங்கள் மூலம் உருவங்கள் அமைத்து பணி புரிவதில் சிறப்பு வாய்ந்தவர். இந்நிலையில் , விஜயகாந்தின் மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் கட்சியினல்லாத அமைப்பினரும் தங்களது நினைவஞ்சலி பல்வேறு வகையில் செலுத்தி வருகின்றனர். அவ்வகையில் கேளம்பாக்கம் அருகே உள்ள கடற்கரை மணல் பகுதியில் விஜயகாந்தின் உருவத்தை மணல் சிற்பத்தால் வடிவமைத்து மணல் சிற்பக் கலைஞர்கள் சார்பாகவும் அப்பகுதி பொதுமக்கள் சார்பாகவும் நினைவஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் கஜேந்திரன் அமைத்துள்ளார். அவரது இளம் வயது புகைப்படம் கொண்டு இச்சிற்பத்தை வடிவமைத்து அவரது மனிதநேயத்தை போற்றும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி