கோடை மழை உடல் உபாதை சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

57பார்த்தது
கோடை மழை உடல் உபாதை சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
கோடை கத்திரி வெயில் முடிந்து, அவ்வப்போது மழை பெய்ய துவங்கியுள்ளது. இது, புழுக்கத்தை ஏற்படுத்துவதோடு, உஷ்ணம், அஜீரணம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இதை தவிர்க்க, கோடை மழையில் யாரும் நனைய வேண்டாம். மேலும், மழை பெய்து நின்ற உடன் பல மணி நேரம் கழித்து நடமாட வேண்டும் என, சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கோடை காலத்தில், மழை பெய்யும் போது, பருவ நிலை மாறுபடும். இதுபோன்ற நேரங்களில், தண்ணீரை காய்ச்சி வடி கட்டி குடிக்க வேண்டும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், வயோதிகர்கள், கர்ப்பிணியர் ஆகியோர் கவனத்துடன் இருக்க வேண்டும். குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல், உஷ்ணம் இருந்தால், சம்பந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

டேக்ஸ் :