முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் 36, 679 புதிய வாக்காளர்கள்

85பார்த்தது
முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் 36, 679 புதிய வாக்காளர்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில், சோழிங்கநல்லுார், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் - தனி ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன.

மாவட்டத்தில், 18 வயது முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 36, 679 பேர், இந்த லோக்சபா தேர்தலில், வரும் 19ம் தேதி ஓட்டளிக்க உள்ளனர்.

இதில், சோழிங்கநல்லுாரில் 8, 118, பல்லாவரத்தில் 4, 817, தாம்பரத்தில் 4, 795, செங்கல்பட்டில் 5, 648, திருப்போரூரில் 5, 508, செய்யூர் - தனி 3, 580, மதுராந்தகம் - தனி 4, 213 பேர் என, மொத்தம் 36, 679 முதல் முறை ஓட்டளிக்கும் வாக்காளர்கள் உள்ளனர்.

அதோடு, 20 வயது முதல் 29 வயது வரையிலான வாக்காளர்கள் 4 லட்சத்து 18 ஆயிரத்து 646 பேர் உள்ளனர். 30 வயது முதல் 39 வயது வரையிலான வாக்காளர்கள் 6 லட்சத்து 29 ஆயிரத்து 173 பேர் உள்ளனர்.

அதே போல், 40 வயது முதல் 49 வரையிலான வாக்காளர்கள் 6 லட்சத்து 42 ஆயிரத்து 199 பேரும், 50 வயது முதல் 59 வயது வரையிலான வாக்காளர்கள் 4 லட்சத்து 41 ஆயிரத்து 203 பேரும் உள்ளனர்.

முதியோரில், 60 வயது முதல் 69 வயது வரையிலான வாக்காளர்கள் 2 லட்சத்து 86 ஆயிரத்து 603 பேர் உள்ளனர். 70 வயது முதல் 79 வயது வரையிலான வாக்காளர்கள் 1 லட்சத்து 54 ஆயிரத்து 672 பேர் உள்ளனர். அது மட்டுமின்றி, 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், 57, 823 பேர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி