பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்ற ஒன்றிய பெருந்தலைவர்

83பார்த்தது
கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை அன்புடன் வரவேற்ற திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன்.

கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்களை ஆசிரியர் பெருமக்களும் எஸ் எம் சி குழுவினரும் அன்புடன் வரவேற்றனர் அதன் ஒரு பகுதியாக
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களை திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ் ஆர் எல் இதயவர்மன் கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் முன்னிலையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் தேசிய கொடியை ஏற்றி வைத்ததுடன் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்களையும் வழங்கினார் நிகழ்ச்சியில் திருப்போரூர் வட்டார கல்வி அலுவலர் ஜூலியட் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் திமுக ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆசிரிய பெருமக்கள் வார்டு உறுப்பினர்கள் எஸ் எம் சி குழுவினர் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி