கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி இலக்கு

72பார்த்தது
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு ரூ. 120 கோடி இலக்கு
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 120 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு, கூட்டுறவு துறை இலக்கு நிர்ணயம் செய்து உள்ளது. ஒரு ஆண்டிற்கு, வட்டியில்லாத கடன் பெற்று விவசாயிகள் மற்றும் கால்நடை விவசாயிகள் பயன் பெறலாம் என, அத்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 56 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் இயங்குகின்றன. இதில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு, பயிர் கடன் மற்றும் ஆடு, மாடுகள் வைத்திருப்போருக்கு, கால்நடை பராமரிப்பு கடன் என, இரு வித கடன்கள் வழங்கப்படுகின்றன.

இதற்கு, ஆண்டுதோறும் குறிப்பிட்ட தொகை, இலக்கு நிர்ணயம் செய்து கூட்டுறவு துறை கடன் வழங்குகிறது. அதன்படி, 2023 - -24ம் நிதி ஆண்டில், 11, 518 விவசாயிகளுக்கு, 81. 06 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல, 3, 782 பேருக்கு, 14. 44 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு 2024- - 25ல், 100 கோடி ரூபாய் பயிர் கடன் மற்றும் 20 கோடி ரூபாய் கால்நடை பராமரிப்பு கடன் என, 120 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி