"காவல் நிலையத்தின் வயது 117 கேக் வெட்டி கொண்டாட்டம்"

56பார்த்தது
"காவல் நிலையத்தின் வயது 117 கேக் வெட்டி கொண்டாட்டம்"
திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தெற்கு மாடவீதியில், குளத்தை ஒட்டி இ6 -காவல் நிலையம் அமைந்துள்ளது.


இங்கு, இன்ஸ்பெக்டர் அறையாக செயல்படும் பழைய கட்டடம், பிப். , 4, 1907ம் ஆண்டு, ஆங்கிலேயர் காலத்தில், 1, 200 சதுர அடி பரப்பளவில் கட்டுவதற்கு, அப்போதைய ஆங்கிலேய போலீஸ் சூப்பிரண்டு ஏ. பி. அகர் ஸ்க்கொயர் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில், மேற்கூரை ஓடுகள், தேக்கு மரக் கட்டைகளும் அப்படியே இருக்கின்றன. தற்போது, இன்ஸ்பெக்டர் அறை பகுதி மட்டும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

போதிய இடவசதி இல்லாததால், 2004ம் ஆண்டு, தற்போதுள்ள பழைய கட்டடத்திற்கு பின்புறம், புதிய கட்டடம் கட்டப்பட்டு, சப் -- இன்ஸ்பெக்டர் அறை, பதிவு அறை உட்பட முதல் தளத்தில் ஓய்வு அறையுடன் உள்ளன.

நேற்று, காவல் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, 117வது ஆண்டை முன்னிட்டு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் கேக் வெட்டி கொண்டாடினார்.

இதில், மற்ற காவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி