அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை

551பார்த்தது
அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை
செங்கல்பட்டு அருகே தூங்கிக் கொண்டிருந்த நபர் அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டி படுகொலை. செங்கல்பட்டு அடுத்த நெமிலி துஞ்சும் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி இவரது மகன் யுவராஜ் (38) டைல்ஸ் ஒட்டும் பணியை செய்து வருகிறார்.

இந்நிலையில் நள்ளிரவில் வீட்டின் வெளியே யுவராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் யுவராஜன் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இதனை எடுத்து உறவினர்கள் அளித்த புகாரியின் அடிப்படையில் தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் மற்றும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய நபர்கள் யார்???

என செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி