மதுராந்தகம் அருகே நள்ளிரவில் கார் மீது லாரி மோதல் ஒரு பெண்ஒரு பையன் உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்தில் இருவர் பலி ஐந்து பேர் படுகாயம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் படாளம் என்ற இடத்தில் நள்ளிரவு மேல்மருவத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் மீது லாரி மோதியதில் காரில் பயணம் செய்த சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஏழு பேரில்தலையில் பலத்த காயம் அடைந்து பார்வதி (70) சச்சின் (7) ஆகிய இருவர் சம்பவத்தில் பலியானார்கள் மேலும் காரில் பயணம் செய்த ரமணி (52) சாந்தி (50) புவனா (30) சிப்பிகா (3)வினோத் (33) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.