உத்திரமேரூரில் அதிமுக கூட்டணி கட்சியினர் ஓட்டு வேட்டை.

65பார்த்தது
காஞ்சிபுரம் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து உத்திரமேரூர் அடுத்த மருத்துவம்பாடி மற்றும் நாகமேடு உட்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

உத்திரமேரூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் பாபு தலைமையிலும், தேமுதிக ஒன்றிய செயலாளர் அழிசூர் கண்ணியப்பன், நகர செயலாளர் ஐயப்பன், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி பரசுராமன், உத்திரமேரூர் ஒன்றிய துணை செயலாளர் மோகன ராமன், ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட மகளிரணி துணை செயலாளர் காயத்திரி சரவணன், சாலவாக்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகர், உத்திரமேரூர் நகர பொருளாளர் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், நாகமேடு கிளை செயலாளர் பரசுராமன் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி