தைலாவரத்தில் பெயிண்டர் தற்கொலை

2250பார்த்தது
தைலாவரத்தில் பெயிண்டர் தற்கொலை
கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரத்தில் வசித்தவர் ரிஷ்வன், 22. பெயிண்டர். இவர், சமூக வலைதளத்தில் அறிமுகமான சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த, கணவரை பிரிந்து வாழும் சாருமதி என்பவரை, கடந்த ஓராண்டுக்கு முன் திருமணம் செய்து, வாழ்ந்து வந்தார்.

சாருமதிக்கு, முதல் கணவருக்கு பிறந்த ௪ வயது குழந்தை உள்ளது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால், ரிஷ்வனுக்கும் சாருமதிக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனால், சாருமதி கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள அவரின் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், ரிஷ்வன் குடிபோதையில் மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தொடர்ந்து சாருமதியை அவதுாறாக பேசி வந்துள்ளார். அதனால், அவரின் மொபைல் எண்ணை, சாருமதி 'பிளாக்' செய்துவிட்டார்.

அதனால், மனமுடைந்த ரிஸ்வன், வீட்டில் உள்ள மின் விசிறியில் துாக்கிட்டு, நேற்று தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின்படி வந்த கூடுவாஞ்சேரி போலீசார், ரிஷ்வன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி