அதிமுகவினர் ஆலந்தூரில் மனித சங்கிலி போராட்டம்

588பார்த்தது
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க


சென்னை புறநகரம் மாவட்டம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நங்கநல்லூரில் நடைபெற்றது

திமுக அரசை பதவி ஏற்ற நாளில் இருந்து சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதாகவும் தமிழகம் போதை பொருட்களின் தலைநகரமாக மாறி வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதாகவும் போதை பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ்நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் திமுக ஆட்சி என அதிமுகவினர்
மனித சங்கிலி போராட்டம் நடந்தினர்

சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் கே பி கந்தன் வழிகாட்டுதலின்படி ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் வி பரணி பிரசாத் தலைமையில் குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் கே பி ஏசுபாதம், ஆலந்தூர் மேற்கு பகுதி செயலாளர் நந்தம்பாக்கம் ஆர் ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

டேக்ஸ் :